பிரசித்தி பெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் முன்னிட்டு தங்க கருட சேவை உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினந்தோறும் சேஷ வாகனம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, ஆளும் பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத பக்தோசிதப்பெருமாள் மாட விதிகளில் வலம் வந்து அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின் 6 ம்நாள் இன்று கருட சேவை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி உற்சவர் பக்தோசிதப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க 8 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என சக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
