BREAKING NEWS

பிரதமர் நரேந்திர மோடியை வெளியேற வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தியும், கையில் கோ பேக் மோடி என்று ஆர்ப்பாட்டம்.

பிரதமர் நரேந்திர மோடியை வெளியேற வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தியும், கையில் கோ பேக் மோடி என்று ஆர்ப்பாட்டம்.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் மோடியை வெளியேற வலியுறுத்தியும், தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்தும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மேலும் தமிழகம் வந்துள்ளது பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியும், கோ பேக் மோடி என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், கையில் கருப்பு கொடி ஏந்தி சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கோபி பேருந்து நிலையத்தில் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share this…

CATEGORIES
TAGS