BREAKING NEWS

பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் நிதி குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தஞ்சை விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் நிதி குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தஞ்சை விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்தும் பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் நிதி குறைக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தஞ்சை விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பட்டை நாமும் இட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

 

 

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் வேளாண் துறை அதிகாரிகள் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் குருவை சாகுபடி 72816 ஹெக்டேர் பரப்பளவில் செய்யப்பட்டு 70 ஆயிரத்து 155 ஹெட்டேரில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளதாகவும்..,

 

 

ஒரத்தநாடு தஞ்சை திருவையாறு ஆகிய பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் தற்போது வரை 274 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 445 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கடந்த ஆண்டு மழையால் டெல்டா மாவட்டம் குறிப்பாக தஞ்சை மாவட்டம் அறுவடை நேரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் திருவாரூர் நாகை மாவட்டத்திற்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு பயிர் காப்பீடு தொகை வழங்கிவிட்டு தஞ்சை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும்,..

 

தஞ்சை மாவட்டத்திற்கு உரிய பயிர் காப்பீடு தொகையை பெற்று தர வேண்டும் எனவும் பயிர் காப்பீடு தொகை அறிவிக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மத்திய அரசின் இசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவித்தொகை கடந்த ஆண்டு 19000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில் மத்திய அரசு இந்த ஆண்டு 16,000 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கி உள்ளதாகவும்..,

 

 

கேஸ் மானியத்தை போல விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தையும் இல்லாமல் செய்வதற்காகவே இது போன்ற குறைப்பு நடவடிக்கை நடைபெறுவதாக கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமும் இட்டு கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )