பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திருப்பனந்தாளில் நடைபெற்றது.
![பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திருப்பனந்தாளில் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திருப்பனந்தாளில் நடைபெற்றது.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/10/IMG-20221027-WA0063.jpg)
பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில்
ரூ.7 கோடியே 60 லட்சம் சிறப்பு கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முகாமிற்கு செ.ராமலிங்கம், எம்.பி தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு தலைவர் தேவிரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் கோ.க.அண்ணாதுரை, பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், பேரூராட்சி துணை தலைவர் கலைவாணி, சப்பாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலங்களைவ உறுப்பினர்
சு.கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தலைமை அரசு கொறடா கோவி. செழியன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முகாமில் பொது கால கடன் திட்டம், சிறுதொழில் வியாபாரம்,பெண்களுக்கான சிறு கடன் வழங்கும் திட்டம்,
சுயஉதவிக் குழு தனி நபர்கடன்
புதிய பொற்காலத் திட்டம்,கறவை மாடு கடன் திட்டம், இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு சுயத்தொழில் தொடங்க கடன் திட்டம், நெசவாளர் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான.
கடன் வழங்கும் திட்டங்களுக்கு ரூ.7 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ரூ.95 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உரிய முறையில் பரிசீலனை செய்து கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முகாமில் மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா தேவி, பேரூராட்சி செயல் அலுவலர் சின்னதுரை, திமுக பிரதிநிதிகள் மிசா மனோகரன், குமார், சாமிநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாலகுரு, ஊராட்சி மன்ற தலைவர்கள் குணசேகரன், மகேஸ்வரி அருள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.