பிற்படுத்தப் பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் செயல் பாடுகளை அனைத்து துறை பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர்/ பிற்படுத்தப் பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,
துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை திண்டுக்கல் மாவட்டத்திற்கான அனைத்து துறை பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர்- பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா அவர்கள் இரண்டாவது நாளாக இன்று(21.09.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு ரத வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்பாடுகளை இன்று(21.09.2022) அரசு முதன்மை செயலாளர் மங்கத்ராம்சர்மா அவர்கள் நேரில் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், உணவின் தரம், உணவு வழங்கும் முறை ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் உடனிருந்தார்.
பின்னர்
திண்டுக்கல் அரசு கல்லுாரி மாணவிகள்(மி.பி.ந.) விடுதி, அரசு மாணவிகள்(சிறுபான்மையினர் நலம்) விடுதி ஆகிய இடங்களில் தங்கும் அறைகள், உணவு அருந்தும் இடம், மளிகை பொருட்கள் இருப்பு அறை, குடிநீர் வசதி, மின் இணைப்பு, கழிப்பறை, கை கழுவும் இடம், சமையலறை ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் அவர்கள் முன்னிலையில், கண்காணிப்பு அலுவலர்/ பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு முதன்மை செயலாளர் மங்கத்ராம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் வருவாய்துறையின் இணைய வழி அனைத்து வகையான சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், நில அளவை உட்பிரிவு செய்தல்,
முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அனைத்து வகை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். நிறுத்தி வைக்கப்பட்ட மனுக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள், முறையான காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.
மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் எத்தனை நாட்களாக நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும், எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஆகியவை குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா, அவர்கள் கலந்து கொண்டு கூறியதாவது …
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள புதிய திட்டங்களை அனைத்து துறை அலுவலர்களும் விரைவாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள வேண்டும்.
வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தக் கூடிய புதிய திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
கிராமங்களின் அடிப்படை வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய திட்டப் பணிகளை விரிவுபடுத்த வேண்டும். பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
மேலும் நமக்கு நாமே திட்டத்தில் நகராட்சி பகுதியில் செயல்படுத்தக் கூடிய பணிகளை குறித்த காலத்தில் மேற்கொள்ள வேண்டும்.
சாலை பாதுகாப்பு பணிகளுக்காக செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளை விரைந்து முடிக்க வேண்டும். புதிய சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி கட்டிடங்களை புதுப்பித்தல் பராமரித்தல் புணரமைத்தல் புதிய கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மேலும் ஏழை எளிய படித்த இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலான நீட்ஸ்த் திட்டம், தாட்கோ திட்டங்கள் மூலம் தொழில் தொடங்குகின்ற கடனுதவி வழங்கும் திட்டங்களை அதிக அளவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தினை சிறப்புற விரைவுபடுத்தி மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து துறை அலுவலர்களும் அரசின் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய மேம்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள் அளிக்கும் அனைத்து வகையான மனுக்களின் மீதும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.
எனவே, அலுவலர்கள் பொது மக்களின் அனைத்து வகையான கோரிக்கை மனுக்களின் மீதும் விரைந்து நடவடிக்கை எடுத்து, தீர்வு காண வேண்டும். முறையான, சரியான காரணங்களுக்காக மட்டுமே தள்ளுபடி செய்ய வேண்டும்.
விண்ணப்பங்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அரசு முதன்மைச் செயலாளர் தமங்கத்ராம் சர்மா, அவர்கள் கூறினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், 50 உலமாக்களுக்கு மிதிவண்டிகளை அரசு முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.