பிளக்ஸ் போர்டுகள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிகளில் பிளக்ஸ் போர்டுகள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசின் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் அமலுக்கு வந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு பகுதிகளில், அரசின் திட்டங்கள் தொடர்பான விளம்பர பதாகைகள், முதல்வர், அமைச்சர்களின் விளம்பர பேனர்களையும், கட்சி விளம்பர பேனர்களையும் தேர்தல் அதிகாரிகள் அகற்றப்படாமலும் , அரசியல் சம்பந்தமாக சுவர்களில் எழுதப்பட்டு உள்ளதை அழிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக மாற்றுக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.