பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டண உயர்வு.; அமலுக்கு வந்தது..

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது.
இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளளது.
இந்த விலை உயர்வு அக்டோபர் 1 முதல் ஜனவரி 31, 2023 வரையில் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போனற பண்டிகைகள் வரவுள்ள நிலையில், பிளாட்ஃபார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Uncategorized