BREAKING NEWS

பிஹெச்இஎல், ஃபின்லாந்தின் சுமிடோமோ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் நுழைகிறது.

பிஹெச்இஎல், ஃபின்லாந்தின் சுமிடோமோ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் நுழைகிறது.

பிஹெச்இஎல், ஃபின்லாந்தின் சுமிடோமோ நிறுவனத்துடன் சுழல் பாய்மப் படுகை கொதிகலன்களுக்கான தொழில்நுட்ப உரிம ஒப்பந்தத்தில் நுழைகிறது.

 

திருச்சி,

பிஹெச்இஎல் குழுமம், இந்தியாவிலும், சில நாடுகள் தவிர்த்த வெளிநாட்டுப் பகுதிகளிலும் சப்கிரிட்டிகல் மற்றும் சூப்பர் கிரிட்டிகல் சுழல் பாய்மப் படுகை கொதிகலன்களுக்கான வடிவமைப்பு, பொறியியல்,

 

உற்பத்தி, கட்டுமானம், இயக்கி வைத்தல் மற்றும் விற்பனைக்காக பின்லாந்து நாட்டின் சுமிடோமோ நிறுவனத்துடன் நீண்ட கால தொழில்நுட்ப உரிம ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளது.

 

பிஹெச்இஎல்-ன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் நளின் ஷிங்கால் மற்றும் பிஹெச்இஎல் குழுமத்தின் செயல்பாட்டு இயக்குநர்கள் முன்னிலையில் பிஹெச்இஎல்-ன் பொறியியல், ஆராய்ச்சி மற்றும்

 

மேம்பாடுகளுக்கான இயக்குநர் ஜெய் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் சுமிடோமோ நிறுவனத்தின் உரிமம், உத்தி மற்றும் வணிக மேம்பாடுகளுக்கான மூத்த துணைத் தலைவர் ஆசிப் ஹுசைன், ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

இந்த ஒப்பந்தம், தற்போதைய உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்வதில் பிஹெச்இஎல்-ன் விரிவான திறன்களை வலுப்படுத்துவதுடன், அரசாங்கத்தின் ‘இந்தியாவிலேயே தயாரிப்பது’ திட்ட முயற்சிகளுக்கும் பங்களிக்கும். சுழல் பாய்மப் படுகை கொதிகலன் தொழில்நுட்பம், உள்ளார்ந்த நன்மைகளைக் கொண்டுள்ளது. 

 

அதாவது, தற்போதுள்ள உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்யும் அதே நேரம், எரிபொருள் நெகிழ்வுத் தன்மையையும் அனுமதிக்கும். மேலும், வழக்கமான நிலக்கரி அடிப்படையிலான தொழில்நுட்பங்களை விட பகுதி சுமைகளில் சிறந்த செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை அளிப்பதுடன், குறைந்த அளவு கந்தக ஆக்சைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வைக் கொண்டுள்ளதால், கூடுதல் உமிழ்வுக் கட்டுப்பாட்டு கருவிகள் / அமைப்புகளை நிறுவ வேண்டிய அவசியமிருக்காது. 

 

குறிப்பிடத்தக்க வகையில், இந்த தொழில்நுட்பம் பிஹெச்இஎல்-க்கு உயிரினத் தொகுதி எரிபொருள் இணை கொண்டு இயங்கும் கொதிகலன்களை வழங்கவும் உதவும்.

 

சுமிடோமோ நிறுவனம், உலகளாவிய, புதுமையான ஆற்றல், சுற்றுச்சூழல் தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதுடன், அதிக செயல்திறன் கொண்ட மற்றும் நெகிழ்வான ஆற்றல் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது. 

 

கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கும் பெரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அதிநவீன ஒரு வழி சூப்பர் கிரிட்டிகல் கொதிகலன்களை உள்ளடக்கிய 540-க்கும் மேற்பட்ட சுழல் பாய்மப் படுகை கொதிகலன்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், சுழல் பாய்மப் படுகை தொழில்நுட்பத்திற்கான மிகப்பெரிய உலகளாவிய வலையமைப்பைக் கொண்டுள்ளது.

 

CATEGORIES
TAGS