புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில் தொண்டரணி செயலாளருக்கு கொலை மிரட்டல்

புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில், தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுக்கு கொலை மிரட்டல் அடுத்தடுத்து விடுக்கப்பட்டு வருகிறது.
புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் எம்.பி. தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து போட்டியிட்டு தோல்வியுற்றார். மற்ற தொகுதிகளைக் காட்டிலும் வேலூர் எம்.பி. தொகுதியில் சண்முகம் முக்கியத்துவம் தருகிறார். இதனால், நிர்வாகிகள் மெகா குஷியில் வலம் வருகின்றனர்.
இந்த நிலையில், புதிய நீதிக் கட்சி தொடங்கியது முதல் தொடக்கக் கால நிர்வாகியான பட்டு வி.பாபு தற்போது தொண்டரணி மாநில செயலாளராக இருந்து வருகிறார். இவர் ஏ.சி.எஸ்ஸிடம் செல்வாக்கு இருப்பதை உள்ளூர் நிர்வாகிகள் சிலரால் பொறுக்கமுடியவில்லை. அவர் மீது அவதூறு பேச்சுகளை செல்போனில் பேசியும், வாட்ஸ் அப் குரூப்புகளில் பரப்பியும் வருகின்றனர்.
இந்த நிலையில், பட்டு பாபுவை குடியாத்தம் நத்தம் ஆதிபகவன் இல்லம் அருகே 23.3.2025அன்று மதியம் முன்னாள் செயலாளரும், கே.வி.குப்பம் தொகுதி பொறுப்பாளருமான பாரத் மகி என்கிற பா.மகேந்திரன் என்பவர் அழைத்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட மோதலின்போது, பட்டு பாவுவின் மனைவி, குடும்பத்தினரை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்தார் பாரத் மகி. அப்போது, பட்டு பாபுவை பாரத் மகியும், நகர மாணவரணி செயலாளர் புவனேஸ்வரிபேட்டை நந்தகுமாரும் பலமுறை தாக்கியுள்ளனர்.
காயம் அடைந்த பட்டு பாபு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகக்ாக சேர்ந்தார். இதுகுறித்து பட்டுபாவு அளித்த புகாரின்பேரில், பாரத் மகி, நந்தகுமார் ஆகிய 2 பேர் மீது நகர போலீஸார் வழக்கு பதிந்து செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில், தனக்கு வாட்ஸ் அப் வாயிலாக வாட்ஸ் மெசைஜ் அனுப்பியும், வீட்டுக்கு 10 பேரை அனுப்பி கல் வீசியதாகவும் நேதாஜி சவுக் இ. சேவை மைய நிர்வாகியும், புதிய நீதிக் கட்சி இளைஞரணி செயலாளருமான ஆர்.ராஜ்குமார் மீது வேலூர் மாவட்ட எஸ்.பி. ஆபிஸிலும், சைபர் கிரைம் போலீஸிலும் பட்டு பாபு புகார் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கு ஆளான பாரத் மகி என்பவர் தியாகி பாரத் எம்.ஆதிமூலத்தின் பேரன் ஆவார்.
இதேபோல், ராஜ்குமார் என்பவர் ஐ.என்.ஏ. படையை நிறுவிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையில் ஜான்சிராணி படையின் பயிற்சியாளராகவும், அந்தப் படையில் முக்கிய பங்கையும் வகித்தவர்.
ராஜ்குமாரின் தந்தை ஜெ.ராஜேந்திரபாபு இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகள்- ஐ.என்.ஏ.வீரர்கள், வாரிசுதாரர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியாகவும், வேலூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்துவருகிறார்.