புன்னைக் காயலில் டிஎம்பி பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

தூத்துக்குடி மாவட்டம் புன்னைக் காயலில் டிஎம்பி பவுண்டேஷன் மற்றும் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் நடந்த இந்த இலவச கண் சிகிச்சை முகாமை புன்னைக் காயல் துணை பங்கு தந்தை ஜெபஸ்டின் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஊர் தலைவர் எடிசன், புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செபஸ்டின் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டி எம் பி ஆத்தூர் கிளை மேலாளர் சரவணகுமார் வரவேற்றார். இதில் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் லோகேஷ் குமார், கோபிநாத் மற்றும் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை நடத்தி சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை டிஎம்பி பவுண்டேஷன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS இலவச கண் சிகிச்சை முகாம்டிஎம்பி பவுண்டேஷன்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்தூத்துக்குடி மாவட்டம்முக்கிய செய்திகள்