புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..

தஞ்சாவூர் மாவட்டம்,
புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போராட்டத்திற்கு எதிராக திருவையாறு கண்டியூர் பொது மக்கள் சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே பெரும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருவையாறு புறவழிச்சாலை அமைக்க கூடாது அமைப்பதனால் விளைநிலங்கள் நெர்ப்பயிறு, தென்னை மரம், வாழை போன்ற பயிர்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவையாறு, நடுக்கடை, கண்டியூர், தில்லைஸ்தானம், விளாங்குடி, காருக்குடி போன்ற ஊர்களில் சாலை ஓரம் உள்ள சுவர்களில் மாவட்ட நிர்வாகமே புறவழிச் சாலையை உடனடியாக துரிதப்படுத்திட வேண்டும். திருவையாறு கண்டியூர் வழியாக பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது.
புறவழிச்சாலியை துரிதப்படுத்திடு, அரசூர், கண்டியூர் புறவழி சாலையை துரிதபடுத்து என திருவையாறு, கண்டியூர் பொதுமக்கள் என அச்சிடப்பட்டு அவர்களுடைய தொலைபேசி நம்பரையும் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள்,விவசாயிகளிடையே பெரும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தி உள்ளது.