BREAKING NEWS

புழுதி பறக்கும் தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி.

புழுதி பறக்கும் தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி.

தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களும் பயணிகளும் பயணம் செய்து வருகின்றனர். இந்த சாலையானது நீண்ட ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்தது அதனால் சாலையானது குண்டும் குழியுமாகவே காணப்பட்டது.

 

வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த சாலை பணியை புதுப்பிக்க தனியார் நிறுவனம் ஒன்று அரசிடம் இருந்து ஒப்பந்தம் எடுத்து, சாலைபுதுப்பிக்கும் பணியை துவங்கியது.

 

 

சாலை பணி துவங்கி 4 மாதங்களாகியும் சாலைப்பணி முடிவடையாமல் மந்தமாக ஆமை வேகத்தில் பணி நடைபெற்று வருகிறது பசுபதிகோயிலில் இருந்து திருவலஞ்சுழி வரை சாலையில் பல இடங்களில் கொத்திபோட்டது போல் கப்பிகள், ஜல்லிகள் சிதறி கிட்கின்றன.

 

திருப்பாலத் துறையிலிருந்து கிட்டத்தட்ட திருவலஞ்சுழி வரை சுமார் 7கிலோமீட்டர் தூரம் உள்ள சாலைகள் செதுக்கப்பட்ட நிலையில், தண்ணீர் கூட ஊற்றபடாமல் இருந்து வருவதால், அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போது,புழுதி பறக்குவதால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது கனரக வாகனங்களை பின்தொடர்ந்து செல்லும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தும் ஏற்படுத்தும் அச்சத்திலேயே வாகனங்களை ஓட்ட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

 

 

பொதுமக்கள் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலைப்பணியை விரைந்து முடிப்பதோடு புழுதி பறக்காத வகையில் சாலையில் தண்ணீர் தெளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

செய்தியாளர் எஸ்.மனோகரன் பாபநாசம்.

CATEGORIES
TAGS