பூண்டியில் உள்ள தனியார் டயர் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியில் இயங்கி தனியார் டயர் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று வழக்கமாக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, தொழிற்சாலையின் பின்புறம் பகுதியில் இயந்திரப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென எரிய தொடங்கியது.இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீச்சடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். தீ விபத்து தொடர்பாக பென்னலூர்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.cheap human hair lace front wigs custom jerseys soccer wig shops big and tall nfl jerseys custom football uniforms cheap nfl jerseys Steelers Jerseys nike air max 97 nike air max for sale nike air max 95 black cheap wigs adidas running shoes sales of air jordan wigs on sale custom softball jerseys
அதில், மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது அருகில் குப்பை எரிந்ததால் தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த தீ விபத்தில் தொழிற்சாலையின் அலுவலக அறையில் இருந்த கணிப்பொறிகள், இயந்திரங்கள், டயர் உதிரிபாகம் தயாரிக்கும் பொருட்கள் என 60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் நடந்த இடத்தை பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரமேஷ் நேரில் சென்று பார்வையிட்டனர்.