பூமியை பாதுகாக்க உலக நாடுகள் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும். பூமி பாதுகாப்பு தின விழாவில் வேண்டுகோள்.
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் நடந்த உலக பூமி பாதுகாப்பு தின விழாவில் இந்த பூமியை பாதுகாக்க உலக நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரிப்பை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, உடன்குடி அருகே உள்ள சீர்காட்சி கிராமத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் சமுதாயக் கூடத்தில் வைத்து பூமி பாதுகாப்பு தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி தலைமை தாங்கினார். மதர் பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் கரோலின் ஜெபசீலி,பாலவனிதா,மகராசி சகுந்தலா ஆகியோர் முன்னில வகித்தனர். மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எஸ் ஜே கென்னடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் உலகில் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த உலகை ஒரு முறை அளிப்பதற்கு எவ்வளவு அணு ஆயுதங்கள் தேவையோ அதைவிட பல மடங்கு அழிப்பதற்கான அணு ஆயுதங்கள் இந்த பூமியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இனி மூன்றாவது உலக யுத்தம் ஏற்படுமானால் அது அணு ஆயுதப் போராகவே இருக்கும். “அத்தகைய போரில் தோற்றவனும் உயிரோடு இருக்க போவதில்லை, வெற்றி பெற்றவனும் உயிரோடு இருக்கப் போவதில்லை.”
அணு ஆயுத ஆலைகள் மிக பாதுகாப்பாக கட்டப்பட்டிருந்தாலும் கூட அணு உலையில் ஏற்படுகின்ற விபத்து என்பது மிகவும் அபாயகரமானது என்று வலியுறுத்தப்பட்டு ஆகவே “உலக நாடுகள் அணு ஆயுத தயாரிப்பை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னதாக மதர் இளம்பனை பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் சுஜிதா வரவேற்றார்.
முடிவில் மதர் கற்பகதரு பனைப்பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் சுமித்ரா நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன நிர்வாகிகள் மற்றும் லீடூ டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள் செய்தனர்