BREAKING NEWS

பூம்புகார் அருகே கடலில் மிதந்து வந்த உருளை வடிவிலான மர்ம பொருள் கடலோர போலீசார் நேரில் விசாரணை.

பூம்புகார் அருகே கடலில் மிதந்து வந்த உருளை வடிவிலான மர்ம பொருள் கடலோர போலீசார் நேரில் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்

 

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவ கிராமத்தில் கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் மிதந்து கொண்டிருந்த உருளை வடிவிலான பொருளை பார்த்தனர்.

 

 

அதனை மீனவர்கள் கரைக்கு இழுத்து வந்து கரை சேர்த்துள்ளனர் அருகில் இலங்கை இருப்பதால் அங்கிருந்து வந்திருக்கலாம் எனவும் மீனவர்கள் சந்தேக படுகின்றனர். இது குறித்து வானகிரி மீனவர்கள் பூம்புகார் காவல்துறைக்கும், நாகை கடலோர காவல் படைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

 

பின்னர் கடலூர் அமலாவுக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி வெர்ஜினியா மர்ம பொருள் குறித்து நேரில் ஆய்வு செய்தார், மேலும் அப்பகுதி மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

 

 

கடந்த 5 ஆம் தேதி மாலை தரங்கம்பாடி கடலோர பகுதியில் பர்மாவில் இருந்து மரங்களால் ஆன தெப்பம் ஒன்று சிறிய புத்தர் சிலையுடன் சிதிலமடைந்த நிலையில் கரை ஒதுங்கி மீனவ மக்களிடம் பெரும்பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இன்று வானகிரி கடலோரப் பகுதியில் பெரிய ராட்சஷ உருளை ஒதுங்கி இருப்பது மேலும் மீனவ மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

CATEGORIES
TAGS