பூர்விக சொத்தை மீட்டு தர கோரி பழையகும்மிடிப்பூண்டி கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
பூர்விக சொத்தை தனது சிறிய தகப்பனார் ஏமாற்றி தன்னையும் தன்னுடைய தாயையும் வீட்டை விட்டு துருத்தியதாக பழைய கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி சார்ந்த கீதா, என்பவர் தனது தாய் மற்றும் கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பழைய கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் ரத்தின ரெட்டியார் என்பவருக்கு
சொந்தமாக பூர்வீக சொத்து உள்ளது. இந்நிலையில் கடந்த 209 ஆம் ஆண்டு ரத்தின ரெட்டியாரின் பேரன் தசரதன் என்பவர் காலம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் தசராதனுக்கு சொந்தமான வீட்டில் அவருடைய மனைவி மற்றும் மகள் வாழ்ந்து வந்தநிலையில்
சில நாட்கள் பிறகு தசராதனுடைய சகோதரன் ரகுபதி என்பவர் சட்ட விரோதமாக அவர் பெயரில் பட்டா மாற்றி உள்ளதாக தசராதனுடைய மகள் கீதா தன்னுடைய தகப்பன் பெயரில் உள்ள சொத்துதை மீட்டு தர கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடமும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.