பெட்டைகுளம் அருகில் கல்குவாரி அமைக்க தடைவிதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் இடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை.

நெல்லை மாவட்டம்
திசையின்விளை தாலுகாவில் வடக்கு பெட்டைகுளத்தில் கிரானைட் கல் குவாரிஅமைக்க போவதாக அரசு அனுமதி அளித்ததை அடுத்து எஸ்டிபிஐ கட்சியின் இராதாபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் தெளபிக் தலைமையில் மாவட்ட ஆட்சியாரை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பது வடக்கு பெட்டைகுளம் சர்வே எண் 712 / 3-ல் திரு.வின்னர் மினரல் எக்சிம் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் நன்செய் கொண்ட வயல்வெளி பகுதியில் கிரானைட் கல்குவாரி அமைக்க அரசிடம் அனுமதி கேட்டுள்ள அடிப்படையில் அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் சுற்று வட்ட பகுதியில் 100க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படுகிறதுஎனவே இதனை கருத்தில் கொண்டு பொது மக்களை உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது அரசின் கட்டாய கடமையாகும் அதன் அடிப்படையில் கல்குவாரிக்கு கொடுத்த அனுமதியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ரத்து செய்ய வேண்டும் என்ற குறிப்பிட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர் சந்திப்பின் போது எஸ்டிபிஐ கட்சி ராதாபுரம் தொகுதி செயலாளர் பெட்டைகுளம் உசேன், கிளை தலைவர் அப்துல் சமது, எஸ்டிபிஐ கட்சி கவுன்சிலர் ரஹ்மத்துல்லா மற்றும் வடக்கு பெட்டைகுளம் ஜமாத் பொதுமக்கள் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
