BREAKING NEWS

பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும்; பொதுமக்களுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு.

பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும்; பொதுமக்களுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு.

சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ரக்சா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது இதில் பெண்கள் ஆண்களை சகோதரர்களாக கருதியும், ஆண்கள் பெண்களை சகோதரியாக நினைத்து கையில் கயிறு கட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது.

சமீப காலமாக பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மாணவிகளையும், பெண்களையும் சகோதரிகளாகவும், மகள்களாகவும் சகோதரத்துடன் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மலையம்பாக்கம் எம் எஸ் ஜே எம் பள்ளியின் சார்பில் அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியைகள் 20க்கும் மேற்பட்டோர் நூற்றுக்கணக்கான ராக்கி கயிறுகளை கையில் எடுத்து கொண்டு பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு அலுவலகங்கள் மற்றும் பேருந்துக்காக பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகளிடம் கையில் ராக்கி கயிறை கட்டி சகோதர பந்தத்தை வலியுறுத்தும் விதமாகவும்,

பாலியல் சீண்டலுக்கு எதிராகவும் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஒன்று திரண்டு பொதுமக்களுக்கு சாதி மத பேதமின்றி கையில் ராக்கி கயிறு கட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

CATEGORIES
TAGS