பெண் ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
பெண் ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று அதிரடியான இன்ப அதிர்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுமுறை ஒரு வருடமாக உயர்த்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அரசு பெண் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதேபோன்று அரசு ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும், குழந்தை பிறந்து சிறிது காலம் கழித்து இறந்தாலும் அவர்களுக்கும் 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேலும் புதிய அறிவிப்பினை தமிழக அரசின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். அதில், ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணிபுரியம் பெண் ஊழியர்களுக்கு இனி 6 மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் விரிவாக விளக்கினார்.
அவர் பேசும், “மக்களை தேடி மருத்துவத் திட்டதின்கீழ் பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளம் 14 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது என்று கூறினார். மேலும் ஹெல்த்கேர் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களின் மாத சம்பளம் ரூ.3000 ஊதியம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
மேலும்,தேசிய நலவாழ்வு குழுவில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளம் 30 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனால் ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மிதந்து வருகின்றனர். குறிப்பாக ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுமுறை அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.
குரங்கு அம்மை தொற்று தமிழகத்தில் இல்லை என்பதையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.