BREAKING NEWS

பெண் காவலர்கள் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி.

பெண் காவலர்கள் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பொன் விழாவாக கொண்டாடும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது.

 

 

அந்த வகையில் பேரணியாக கடலூர் மாவட்டத்திற்குள் வந்த பெண் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அறிவுறுத்தல்படி திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் காவியா உற்சாகமாக வரவேற்றார்.

 

 

தொடர்ந்து மாவட்ட எல்லையான சேப்பாக்கம் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் பேரணியை தொடங்கினர். அப்போது காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

 

CATEGORIES
TAGS