பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்று திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணியை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தனபால் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் அரசு உதவி திட்டங்களை பெற்று தந்தது வாழ்வில் முன்னேற்றிட, உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் விழிப்புணர்வு நடைபெற்றது.
இந்த பேரணியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும் அரசு அளிக்கும் நலத்திட்ட உதவிகளை தெரிவித்தும் விழிப்புணர்வு பேரணி பள்ளியின் தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த பேரணியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தனபால் சிஎம்சி தலைவர் நித்யா ரமேஷ்
மேற்பார்வையாளர் கந்தசாமி உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.