BREAKING NEWS

பெரியகுளத்தில் காதலித்து கரம் பிடித்த மனைவியை மூச்சை பிடித்தும், கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன். பிரேத பரிசோதனைக்கு பின் கணவரின் கொலை செய்த நாடகம் அம்பலம்.

பெரியகுளத்தில் காதலித்து கரம் பிடித்த மனைவியை மூச்சை பிடித்தும், கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன். பிரேத பரிசோதனைக்கு பின் கணவரின் கொலை செய்த நாடகம் அம்பலம்.

சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கை பிரேத பரிசோதனைக்கு பின் கொலை வழக்காக பதிவு செய்து கணவரை கைது செய்து சிறையில் அடைத்து காவல்துறையினர் நடவடிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வி ஆர் பி நாயுடு தெரு பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் அபூபக்கர் சித்திக் என்ற வடிவேல் 40 வயது ரம்ஜான்பேகம் (33) வயது இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் வேடசந்தூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான துணிநுட்ப ஆலையில் வேலை பார்த்து வந்த பொழுது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு காதலாகமாரி திருமணத்தில் முடிந்தது.

 

தற்போது 13 வயதில் அமில பானு என்ற பெண் குழந்தையும் 08 வயதில் அம்ரின் என்ற பெண் குழந்தை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் இரண்டு குழந்தைகளும் அதே பகுதியில் உள்ள தனியர் நடுநிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

 

மேலும் அபூபக்கர் சித்திக் பெரியகுளத்தில் விஆர்பி நாயுடு தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார் அதே பகுதியில் உள்ள வடக்கு பாரஸ்ட் ரோடு பகுதியில் பல சரக்கு கடை நடத்தி வந்துள்ளார்.

 

 

இந்நிலையில் அபூபக்கர் சித்திக்கும் அவரது மனைவி ரம்ஜான் பேகத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக அப்பகுதியில் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய முன் தினம் அபூபக்கர் சித்திக் அவரது மனைவி ரம்ஜான் பேகத்திற்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதில் ரம்ஜான் பேகத்தை அபூபக்கர் சித்திக் அவரது கடை முன்பு பொதுமக்கள் மத்தியில் தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து இரவு ரம்ஜான் பேகம் திடீரென உயிர் இழக்கவே அபூபக்கர் சித்திக் தனது மனைவி உடல்நலக் குறைவால் இறந்து விட்டதாக உறவினருக்கு தகவல் கூறி எல்லோரையும் வரவழைத்து அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் ரம்ஜான் பேகத்தின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதியில் பரபரப்பு நிலவி வந்தது.

 

இதனைத் தொடர்ந்து இத்தகவலை அறிந்த பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி உள்ளிட்ட காவல்துறையினர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு இறந்த ரம்ஜான் பேகத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் பெரியகுளம் காவல்துறையினர் அபூபக்கர் சித்திக் கை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று ரம்ஜான் பேகத்தின் இறப்பு, இயற்கை மரணமா? தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்த நிலையில்,

 

ரம்ஜான் பேகத்தின் இறப்பு குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் கோகுல் கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் ரம்ஜான் பேகம் மூக்கு மற்றும் வாயை பிடித்து அமுக்கி மூச்சு திணறல் ஏற்படுத்தி வலுக்கட்டாயமாக இறக்க செய்துள்ளார் என்ற அறிக்கையை காவல்துறையினருக்கு சமர்ப்பித்ததை தொடர்ந்து.

 

பெரியகுளம் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவல்துறையினர்
அபூபக்கர் சித்திக் என்ற வடிவேல் இடம் துரிதவிசாரணையில் ஈடுபட்டபோது நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ளஅவரது உறவினர் மௌலானா என்பவர் வீட்டில் விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

 

இன்நிலையில் தனது உறவினரின் வீட்டில் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு நீங்கள் இங்கு இருங்கள் மேலும் ஒரு விசேஷ வீட்டிற்குசெல்ல வேண்டி உள்ளது நான்போய் விட்டு மீண்டும் வந்து உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன் என்று இரண்டு மகள்களிடம் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்ட அபூபக்கர் சித்திக் என்ற வடிவேலு விசேஷ வீட்டிற்கு செல்லாமல் தனது வீட்டிற்கே வந்துள்ளார் அப்போது தனது மனைவி ரம்ஜான் பேகத்திடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

அப்பொழுது அபூபக்கர் சித்திக்கின் தாய் பாத்திமா 70 வயது என்பவர் வீட்டில் இருந்துள்ளார் இவர்கள் இருவரும் தகராறில் ஈடுபட்டதை பார்த்து பொறுமை இழந்து வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட அபூபக்கர் சித்திக் ரம்ஜான் பேகத்த்தின் மூக்கு மற்றும் வாயை பிடித்து அமுக்கி மூச்சு திணறல் ஏற்படுத்தி எனது மனைவி ரம்ஜான் பேகத்தை கொலை செய்தேன் என்று கூறியதும் கொலையை மறைக்க நாடகமாடிய சம்பவம் விசாரணையில் தெரியவந்தது.

 

இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்கள் இடம் இறந்த ரம்ஜான் பேகத்தின் உடலை காவல்துறையினர் ஒப்படைத்து நல்லடக்கம் செய்தனர் மேலும் ரம்ஜான் பேகத்தை கொலை செய்த கணவன் அபூபக்கர் சித்திக் என்ற வடிவேல் மீது பல்வேறு குற்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்னிலையில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

 

CATEGORIES
TAGS