பெரியகுளம் நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக பெரியகுளம் நகராட்சியும் மற்றும் திருநெல்வேலி மாஸ் அறக்கட்டளை இணைந்து நகராட்சிக்கு சொந்தமான பிராணிகள் கருத்தடை மையத்தில் இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது இன்று கருத்தடை செய்யப்பட்ட நாய்களை மூன்று நாட்கள் நகராட்சியின் கட்டுப்பாட்டில் பராமரித்து,.
பின்பு நாய்கள் எந்த பகுதியில் பிடிக்கப் பட்டனவோ அந்த பகுதியில் மீண்டும் கொண்டு பாதுகாப்பாக விடப்பட்டு நாய்களின் செயல்பாடு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளதகவும் நகராட்சி ஆணையாளர் புனிதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர் மண்டத் தலைவர் சுமிதா சிவகுமார் நகராட்சி ஆணையாளர் புனிதன் சுகாதார ஆய்வாளர் அசன் முகமது சேகர் நகராட்சி ஊழியர்கள் மற்றும்
நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான நாய்களை நாயின் உரிமையாளர்களே அழைத்து வந்து கருத்தடை செய்வதற்கு ஆர்வத்துடன் கொண்டு வந்து கருத்தடை செய்தனர்.
மேலும் பெரியகுளம் பகுதியில் கடந்த ஒரு சில நாட்களாக தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறு மற்றும் வெறி பிடித்த நாய்கள் பொதுமக்களை கடித்து காயம் ஏற்படுத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும்,
இதனால் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சமும் பீதியும் ஏற்படுத்தி வந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகம் தெருக்களில் சுற்றித்திரிந்த நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து தடுப்பூசி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.