பேரணாம்பட்டில் எல்ஐசியில் பணம் செலுத்தி விட்டு ஏமாந்து நிற்கும் ஏழை பெண்மணி.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரபிக் பாஷா மனைவி சுல்தானா இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தனது மகன் ஷபீக் பாஷா மீது எல் ஐ சி யில் பணம் கட்டி வந்தார்.
பேர்ணாம்பட்டு செல்லபள்ளி சார்ந்த எல் ஐ சி ஏஜென்ட் ராதாகிருஷ்ணன் என்பவர் தூண்டுதலின் பேரில், தனது மகன் பெயரில் 7 மாதத்திற்கு ஒரு முறை 4,500 வீதம், ஒரு லட்சத்து 80 ஆயிர தனது மகன் ஷபீக் பாஷா பெயரில் தவணைகளை செலுத்தியுள்ளார் இதற்கிடையில் சுல்தானாவின் மகன் ஷபீக் பாஷா நோய் வாய்ப்பட்டு வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு இறந்துள்ளார்.
அதன் பிறகு சுல்தானா தனது மகன் இறப்பை தெரிவித்து அதற்கு முன்பு அவன் நோய்வாய் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வருவதையும் எல்ஐசி ஏஜென்ட். ராதாகிருஷ்ணனுக்கு இதற்கிடையில் தகவல்களை சுல்தானா எல்ஐசி ஏஜென்ட் ராதாகிருஷ்ணனுக்கு தகவல்களை கூறியுள்ளார்.
எல்ஐசி ஏஜென்ட் ராஜா கிருஷ்ணனும் நாலாவது பில்லை செலுத்தி விடுங்கள் இல்லையென்றால் உங்கள் எல்ஐசி கேன்சல் ஆகிவிடும் என்று ஏதும் சொல்லாமல் விட்டுவிட்டு இருக்கிறார் எழுத படிக்கத் தெரியாத சுல்தானா அமைதியாக இருந்து உள்ளார்.
தற்போது தனது மகன் இறந்து விட்டதாக கூறி தங்களது எல்ஐசி தொகையை கேட்டபோது எல்ஐசி தொகை எல்லாம் உங்களுக்கு கிடைக்காது நீங்கள் நாலாவது பில் தொகை செலுத்தவில்லை என்று எல் ஐ சி ஏஜென்ட் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் இதனால் மனம் உடைந்து போன சுல்தானா என்ன செய்வது என்று அறியாமல் குழம்பிப் போய் உள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட எல்ஐசி மேல் அதிகாரிகள் சுல்தானாவுக்கு சேர வேண்டிய எல் ஐ சி காப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுல்தானா தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து சுல்தானாவின் மகனுக்கு சேர வேண்டிய எல் ஐ சி தொகையை வழங்க வேண்டும் என்பதே சுல்தானா குடும்பத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.