BREAKING NEWS

பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் தோல் தொழிற்சாலைகள்.

பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் தோல் தொழிற்சாலைகள்.

வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் KRB மற்றும் கமாலுதீன் என்ற இரண்டு தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த இரண்டு தோல் தொழிற்சாலைகளில் இருந்தும் இரவு வேலைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்களை இந்த வழியாக செல்லும் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரில் கலந்து வருகின்றன.

 

கடந்த வருடம் கமாலுதீன் தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் மத்தூர் பகுதி மக்களின் வீடுகளில் வெள்ளமாக சூழ்ந்ததை பொதுமக்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று கழிவு நீரை வெளியேற்றிய தோல் தொழிற்சாலையை அதிகாரிகள் கண்டித்து சென்றதை இந்த பகுதி மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

 

எனவே இது குறித்து மாசுக்கட்டுப்பாடு அதிகாரி ரவிச்சந்திரன் மேற்கண்ட தொழிற்சாலைகள் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS