BREAKING NEWS

பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் தோல் தொழிற்சாலை.

பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் தோல் தொழிற்சாலை.

பேரணாம்பட்டு கே கே நகர் ஜே ஜே நகர் எம்ஜிஆர் நகர் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் இவர்களில் பெரும்பாலான குடும்ப பெண்கள் குமரிகள் சூ தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள் இவர்கள் புற்றுக் கோயில் வழியாகத்தான் வருவார்கள் இந்த பகுதியில் இயங்கி வரும் உசேன் முபாரக் என்ற தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

 

இந்த தோல் தொழிற்சாலை சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தொழிற்சாலையில் உள்வழகத்தில் வெளியேற்றுகின்றனர் இதனால் இந்த தொழிற்சாலையை ஒட்டி வாழும் பொது மக்களுக்கு மிகவும் தொல்லையாக வருட கணக்கில் இருந்து வருகிறது காரணம் இவர்கள் வெளியேற்றும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாதவை ஆகும் இதனால் மிகப்பெரிய துர்நாற்றம் இந்த கம்பெனியில் வீசுகிறது வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலான ஆண்கள் இந்த வழியாக வருவதால் இந்த துர்நாற்றம் பெருந்தலையை கொடுக்கிறது.

 

மேலும் இந்த தொழிற்சாலையை ஒட்டி வாழும் பெண்கள் எங்களால் இந்த கம்பெனியில் இருந்து வரும் துர்நாற்றத்தை தாங்க முடியவில்லை குமட்டல் வருகிறது பல்வேறு நோய்கள் வர காரணமாக இருக்கிறது என்றும் இரவில் கொசு தலைகள் அதிக அளவில் ஏற்படுவதால் எங்களுக்கு நிம்மதியான தூக்கமும் இல்லை என்று குமரலாடுகிறார்கள் மேலும் இரவு நேரங்களில் இந்த சுத்திகரிக்கப்படாத தோல் கழிவு நீரை கம்பெனியில் உள் வளாகத்தில் வெளியேற்றுவதால் அதிலிருந்து வரும் துர்நாற்றத்தாலும் எங்களின் தூக்கமும் நிம்மதியும் கெடுகிறது என்றும்,..

இதுபோல் அநியாயத்தை செய்து வரும் இந்த தோல் தொழிற்சாலையின் மீது வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் நேர்மையான அதிகாரி என்று பொதுமக்களால் போற்றப்படும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி ரவிச்சந்திரனும் எந்தவித பாரபட்சமும் பாராமல் உசேன் முபாரக் தோள் தொழிற்சாலையின் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களிலாவது நாங்கள் நிம்மதியாக தூங்கவும் நிம்மதியாக வாழவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களின் தாழ்மையான கோரிக்கையாகும் என்று இப்பகுதி மக்களால் கோரிக்கை விடப்படுகிறது.

இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி ரவிச்சந்திரன் இதில் தனி கவனம் செலுத்தி தக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS