BREAKING NEWS

பேரணாம்பட்டில் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமையில் திறக்கப்படாத ரேஷன் கடைகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் குடும்ப அட்ட தாரர்களின் எதிர்பார்ப்பு.

பேரணாம்பட்டில் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமையில் திறக்கப்படாத ரேஷன் கடைகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் குடும்ப அட்ட தாரர்களின் எதிர்பார்ப்பு.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகாவில் பிரதி மாதம் முதல் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகளில் ரேஷன் கடைகள் இயக்கப்பட வேண்டும் என்பது விதி.

 

 பேரணாம்பட்டு தாலுகாவில் பெரும்பாலான விற்பனையாளர்கள் ரேஷன் கடைகள் திறப்பதில்லை. குறிப்பாக ரெட்டி மாங்குப்பம் பரவக்கல் டி டி மோட்டூர் கார்கூர் பேரணாம்பட்டு சின்ன பஜார் வீதி ரஷமதாபாத் மாச்சம்பட்டு போன்ற பகுதிகளில் உள்ள விற்பனையாளர்கள் கடைகளை திறப்பதில்லை இதனால் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

 

குறிப்பாக 5 .3 .2023 அன்று ரஷமதாபாத் பகுதியில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் லோகேஸ்வரன் கடையை திறக்கவில்லை. கூடுதலாக சின்ன பஜார் வீதியில் உள்ள ரேஷன் கடையையும் லோகேஸ்வரன் தான் பார்த்துக் கொள்கிறார்.

 

ஆனால் அந்தக் கடையும் இதே 5 ம் தேதி திறக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலக உதவியாளர். மணி. மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து தன்னுடைய விருப்பத்திற்கு அதிகாரிகளிடம் அந்த தகவலையும் தெரிவிக்காமல் இரண்டு ரேஷன் கடைகளையும் திறக்காத விற்பனையாளர். லோகேஸ்வரன் மீது மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சுமதி,  பேரணாம்பட்டு வட்ட வழங்கல், (பொறுப்பு) அலுவலர் பலராமன், ஆகியவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மேற்கண்ட இரண்டு ரேஷன் கடைகளின் குடும்ப அட்ட தாரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

CATEGORIES
TAGS