பேரணாம்பட்டு அடுத்த சின்னதாமல்செருவில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா சின்னதாமல்செருவு ஊராட்சி சாந்தி ஜீவா திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு பேரணாம்பட்டு தாசில்தார் கே. ராஜ்குமார் தலைமை தாங்கினார். குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. அமலு விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தேவி, வருவாய் ஆய்வாளர் சற்குணா, கிராம நிர்வாக அலுவலர்கள் எம். உதயகுமார், சிவப்பிரகாசம், தனசேகரன், எம். சௌந்தரி ஜெய்சங்கர், நவீன் குமார், மேகநாதன், வடிவேலு, கிராம உதவியாளர்கள் கமலாபுரம் சுரேஷ்குமார், வெங்கடேச பாபு, அனிதா, கே. சுந்தரேசன், குப்புசாமி, ஆர் பாஸ்கரன், சின்னச்சாமி, ராஜேஸ்வரி, ஹரிதாஸ், புகலூர் சுரேஷ்குமார், வரதன், ஆதி திராவிடர் நல விடுதியில் காப்பாளர் எஸ்.ஆனந்தகுமார், பங்களாமேடு மன வளர்ச்சி குன்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.
ஜெயகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ். கோமதி சௌந்தர்ராஜன், எஸ். கோதண்டன், ஜெ. ராஜமாணிக்கம், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் மசிகம் எஸ். மாலதி, ஊராட்சி செயலாளர்கள் மாச்சம்பட்டு சி. மாதவன், ஆர். புருஷோத்தமன், அனிதா உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.