பேரணாம்பட்டு இராஜாக்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜெயந்தி வெங்கடேசன் பற்றி அவதூறு செய்தி கலெக்டர் குமாரவேல் பாண்டியன். நடவடிக்கை எடுப்பாரா என்று ஜெயந்தி வெங்கடேசன் எதிர்பார்ப்பு..
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் இராஜக்கல் ஊராட்சியில் கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜக்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிற்க்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயந்தி வெங்கடேசன். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அப்போது தேர்தல் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயந்தி வெங்கடேசன் தனது பணியை செவ்வனை செய்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜெயந்தி வெங்கடேசன் ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் தோல்வி அடைந்ததாக சில நாள் இதழ்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மிகவும் மர்மமாக ரகசியங்கள் வெளியே கசிந்துள்ளது. மேலும் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற உறுப்பினரான ஜெயந்தி வெங்கடேசன் தோல்வி அடைந்ததாக உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால் ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயந்தி வெங்கடேசனுக்கு மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகியுள்ளார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலக ரகசியங்கள் வெளியானது எப்படி இதற்கு யார் காரணம் என்பதை இந்த பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தப்பு செய்து அதிகாரிகளுக்கு துறை ரீதியான தண்டனையை வழங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டுள்ள ராஜாக்கல் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயந்தி வெங்கடேசன் எதிர்பார்ப்பாக உள்ளது.