பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சிக்கு புதிய ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படுவாரா?

வேலூர் மாவட்டம்: பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சி சோமு (எ) சோமசுந்தரம் பணியாற்றி வந்தார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோமசுந்தரம் காலமாகிவிட்டார். அதன் பிறகு ஒரு சில ஊராட்சி செயலாளர்கள் சாத்கர் ஊராட்சியை கூடுதலாக கவனித்து வந்தனர் சில மாதங்களுக்கு முன்பு அரவட்லா ஊராட்சி செயலாளர். நேதாஜி சாத்கர் ஊராட்சியைக் கூடுதலாக கவனித்து வந்தார்.
ஓரளவுக்கு சாத்கர் ஊராட்சி நன்றாகவே போய்க்கொண்டிருந்தது இந்நிலையில் பத்தலபல்லி ஊராட்சி செயலாளர் மணிவண்ணன். சாப்ட்வேர் ஊராட்சியை கூடுதலாக கவனிக்க என்று சாத்கர் ஊராட்சிக்கு அன்று பிடித்தது சனியன். கள்ளிப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் தெரு மின் விளக்குகள் பகல் முழுவதும் எரிகிறது.
இதனால் தமிழக அரசின் பணமும் மின்சாரமும் வீணாகி போகிறது ஆங்காங்கு கழிவு நீர் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர்கள் ஆக்கிரமிப்பதாகவும் இது பற்றியோ அல்லது பல்வேறு சான்றுகளுக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தை நாடி இப்பகுதி மக்கள் எந்நேரமும் ஊராட்சி மன்ற அலுவலகம் மூடியே இருப்பதாகவும் (பொறுப்பு) ஊராட்சி செயலாளர் மணிவண்ணன்.
காணாமல் போய்விடுவதால் பொதுமக்கள் ஏமாந்து திரும்பி செல்வதாக கூறப்படுகிறது எனவே இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்வர்ணலதா மணிவண்ணனை போன்ற ஊராட்சி செயலாளரை கூடுதலாக நியமிக்க செய்து இப்பகுதி மக்களின் வயிற்றெரிச்சலை கிளப்பாமல் சாத்கர் ஊராட்சிக்கு நிரந்தரமான ஒரு ஊராட்சி செயலாளரை நியமிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.