பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சியில் கழிவுநீரை சரிவர அகற்றாததால் பொதுமக்கள் அவதி!
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் அடைப்பு எற்பட்டு தெருக்களில் கழிவுநீர் கசிந்து ஓடுகிறது. இதனால் இப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் கொசுத் தொல்லை ஏற்பட்டு இரவில் தூங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் குறிப்பாக 2வது வார்டில் சாலை வசதி கூட இல்லாமல் இப்பகுதி மக்கள் நடந்து செல்லக் கூட வசதியில்லாமல் மிகவும் அல்லல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீத பிரியாவிடமும், பொறுப்பு ஊராட்சி செயலாளர். மணிவண்ணனிடமும் இப்பகுதி மக்கள் பல தடவை எடுத்துச் சொல்லியும் ஒரு நடவடிக்கையையும் இவர்கள் எடுக்கக்கவில்லை. மணிவண்ணன் ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பத்தலப்பல்லி ஊராட்சிக்கு பொறுப்பு செயலாளராக இருந்து வருகிறார் என்றும், சாத்கர் ஊராட்சியில் ஏதேனும் பிரச்சனை என்றால் 7 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மணிவண்ணனை தேடிச் செல்ல வேண்டிய நிலைமை இப்பகுதி மக்களுக்கு எற்படுகிறது.
ஏற்கனவே சாத்கர் ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வந்த எம். சோம சுந்தரம் என்பவர் சாத்கர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏதேனும் ஒரு குறை என்றால் போன் செய்தால் உடனே சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று என்ன குறை, ஏது குறையென்று கேட்டு சாத்கர் ஊராட்சி பொது மக்களின் தேவைகளையும், குறைகளையும் தீர்த்து வைப்பார். சாத்கர் ஊராட்சி பொதுமக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவராக அப்போதைய செயலாளர். சோமசுந்தரம் செயல்பட்டு வந்தார்.
இப்போது சாத்கர் ஊராட்சியைக் கூடுதலாக கவனிக்கும் மணிவண்ணன் சாத்கர் பக்கமே சரியாக வருவதில்லையென்றும், அப்படியே வந்தாலும் சில மணி நேரமே இருந்து விட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார் என்றும், ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீத பிரியாவை லென்ஸ் வைத்துத் தேட வேண்டிய நிலைமை இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஒரு சமயம் 2வது வார்டு பொதுமக்கள் எங்கள் வார்டுக்கு சாலை வசதியையும், கழிவு நீர் வெளியேறுவதற்கு கால்வாய் வசதியையும் செய்து தாருங்கள் என்று கேட்டதற்கு,2வது வார்டு எங்கே வருகிறது என்று சங்கீத பிரியா பொது மக்களிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. தான் ஊராட்சி மன்ற தலைவராகவுள்ள ஊராட்சி எங்கே வருகிறது என்று கூட தெரியாமல் இருக்கும் சங்கீத பிரியாவின் கையில், குரங்கு கையில் பூ மாலைக் கொடுத்த கதையாக உள்ளது என்றும், இந்த நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர்.
சங்கீத பிரியாவும், பொறுப்பு ஊராட்சி மன்ற செயலாளர். மணிவண்ணனும் தங்களது பதவியையும், வேலையையும் ராஜினாமா செய்து விட்டு, வீட்டில் ஓய்வு எடுப்பதே இந்த இருவரும் இந்திய நாட்டிற்கு செய்யும் மிகப்பெரிய தியாகமாகும் என்றும் இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.