பேரணாம்பட்டு தாலுகாவில் தொடரும் மணல் கொள்ளை துணை போகும் வருவாய் ஆய்வாளர். கீதா
வேலூர் மாவட்டத்திலேயே எங்கும் இல்லாத அளவுக்கு பேரணாம்பட்டு தாலுகாவில் அதிக அளவில். அதாவது ஒரு நாளைக்கு மாட்டு வண்டிகளில் மட்டும் 200 வண்டிகளிலும் தினமும் 15 டிராக்டர்கலிலும் திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுகிறது.
என்றும் மணல் கடத்து அவர்களிடம் இருந்து. மாதத்திற்கு ஒரு மாட்டு வண்டிக்கு தலா ஐந்தாயிரம் ரூபாயும் ஒரு டிராக்டருக்கு தல 20000 முதல் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக்கொண்டு வருவாய் ஆய்வாளர் கீதா இரவு 2 மணி முதல் விடிய காலை 4 மணி வரை மணலை யாருக்கும் தெரியாமல் மணல் கடத்திக் கொள்ளுங்கள் என்றும்,
டிராக்டரில் மணலை நிரப்பிவிட்டு அதன் மீது ஒரு பிளாஸ்டிக் விரித்து போட்டு அதன் மீது செம்மண்ணை போட்டு மூடி எடுத்துச் செல்லுங்கள் என்றும் யாருக்கும் தெரியாது என்றும்,
மணல் கடத்தல் காரர்களுக்கு வருவாய் ஆய்வாளர் கீதா ரகசிய ஆலோசனைகளை மணல் கடத்தற்காளர்களுக்கு வழங்குவதாகவும் கூறப்படுகிறது இது குறித்து ஒரு தினசரி நாளிதழின் பத்திரிகையாளர் பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியில் ஒரு டிராக்டர்யிலும் மாட்டு வண்டியிலும் மணல் கடத்திக் கடத்தப்படுகிறது என்று வருவாய் ஆய்வாளர் கீதாவுக்கு தகவல் தெரிவித்தார்.
அதைக் கேட்டுக் கொண்ட கீதா தான் நடைப்பயிற்சியில் இருப்பதாகவும் தன்னால் இப்போது ஒன்றும் செய்ய இயலாது என்றெல்லாம் பத்திரிகையாளரிடம் கூறி நழுவி விட்டார் இதுகுறித்து பத்திரிகையாளர் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமனிடம் நடந்தவற்றைப் பற்றி தகவல் கூறினார்.
இவைகளைக் கேட்டுக்கொண்ட குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் தாங்கள் நேரில் வந்து வருவாய் ஆய்வாளர் கீதாவை பற்றி புகார் அளித்தார் தீர விசாரித்து இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.