பேரணாம்பட்டு பழுது அடைந்துள்ள பாலம் மாணவர்கள் அவதி சரி செய்யக்கூறி நகர பாஜக அணி ஓ பி சி தலைவர் ஜி கந்தன் கோரிக்கை.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு நகர பாஜக ஓபிசி அணியின் தலைவர் ஜி கந்தன். பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சுபாஷினிக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது 11வது வார்டு அருகே கொத்த பல்லிக்கு செல்லும் வழியில் தரைப்பாலம் பழுது அடைந்துள்ளது.
இதனால் கொத்தபல்லி பகுதிகளிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு பேருந்தில் செல்லக்கூடிய மாணவ மாணவிகள் பேருந்து வராததால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து நகராட்சி ஆணையாளராகிய தாங்கள் உடனடியாக இத்தரை பாலத்தை சரி செய்து பேருந்துகள் வந்து செல்லக்கூடிய அளவுக்கு நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ மாணவிகள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அந்த மனுவில் கூறப்படுகிறது.
CATEGORIES வேலூர்