பேரணாம்பட்டு புதிய சார் பதிவாளராக ஞானசெல்வம் பதவியேற்பு!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சார் பதிவாளராக பதவி வகித்து வந்தவர் ராதிகா. இவர் கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்த பொதுமக்களை இது சரியில்லை, அது சரியில்லை
என்று குறைகளை கூறி தன்னை நாடிவரும் பொதுமக்களை அலைகழித்து அகமகிழ்ச்சி கொண்டிருந்தார். என்றைக்கு ராதிகா சார் பதிவாளராக பதவி ஏற்றுக்கொண்டாரோ அன்றே பேரணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பிடித்தது சனி. ராதிகா செய்த அடாவடி, அராஜகங்களை கண்டித்து.
கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்படியும் மேலதிகாரிகள் ராதிகா மீது எந்த நடபடிக்கையும் எடுக்கவில்லை.
பாதகாணிக்கை என்ற திரைப்படத்தில் கவிஞர். கண்ணதாசன் எழுதிய ‘ஆடிய ஆட்டம் என்ன , பேசிய வார்த்தை என்ன என்று எழுதியிருப்பார்.
இதற்கு அடுத்த வரியாக தேடிய செல்வம் என்ன , ராதிகா போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல . இதற்கு மத்தியில் தற்போது ராதிகா திருப்பத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இத்தகவல் அறிந்து பேரணாம்பட்டு பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது பேரணாம்பட்டு புதிய சார் பதிவாளராக ஞானசெல்வம் பதவி ஏற்றுக் கொண்டார்.
அவருக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், அலுவலக ஊழியரான அம்ஜத், முன்னாள் ஊழியரான இளங்கோவன், பேரணாம்பட்டு நாட்டாண்மைதாரரும்,
இந்திய குடியரசுக் கட்சியின் மூத்த தலைவருமான பி.மணவாளன் உட்பட மற்றும் பலர் அவருக்கு சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.