பேரணாம்பட்டு புதூரில் லஞ்சப் பணத்தில் வீடு கட்டிய ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் எஸ். வசிமுல்லா!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய மேல் வழித்துணையாங்குப்பம் (எ) எம்.வி. குப்பம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருந்து வருபவர் எஸ். வசிமுல்லா. சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எம்.வி.குப்பம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு முன்பு ஒரு ஒழுகின ஓட்டு வீட்டில் மிகவும் வறுமையில் 3 வேளை சாப்பாட்டிற்கெல்லாம் கஷ்டப்படட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் வசிமுல்லா ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக பதவி ஏற்றதும் திமுகவைச் சேர்ந்தவரான வசிமுல்லா எப்படி எல்லாம் லஞ்சம் வாங்க வேண்டும் என்று தனக்குத் தானே திட்டம் தீட்டி ஊராட்சி செயலாளர் லட்சுமியின் ஆதரவுடன் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் பல குளறுபடி வேலைகளைச் செய்து குறுகிய காலத்திலேயே, பல லட்ச ரூபாய் செலவில் பெரிய மாடி வீட்டைக் கட்டியுள்ளார்.
என்று பொதுமக்கள் தரப்பில் கதைகதையாக கூறப்படுகிறது. பேரணாம்பட்டைச் சேர்ந்த ஒருவருக்கு.வசிமுல்லா கடன் தர வேண்டி இருந்துள்ளது. வீட்டிற்கும் கடன் தர வேண்டி இருந்திருக்கிறது.
வசிமுல்லா அந்த நபரை என் வீட்டுக்கு வா பணம் தருகிறேன் என்று கூறி இருக்கிறார். வசிமுல்லா சொன்னதை நம்பி அந்த நபர் வசி முல்லா குடியிருக்கும் எம். வி. குப்பம் புதூருக்கு அடிக்கடி சென்று இருக்கிறார். வசிமுல்லாவும் கடன் தர வேண்டிய நபரை பேரணாம்பட்டு பி. டி. ஓ. அலுவலகத்துக்கு வருகிறேன்.
அங்கு வாருங்கள் கொடுத்து விடுகிறேன் என்று ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
நொந்து போன அந்த நபர் மீண்டும் வசிமுல்லா வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு திண்ணையில் வசிமுல்லாவின் மகள் அமர்ந்திருக்கிறார். அவரிடம் வசிமுல்லா பாய் இருக்கிறாரா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த வசிமுல்லாவின் மகள் அவர் என் அப்பாதான் உள்ளே இருக்கிறார் என்றும், இருங்கள் கூப்பிடுகிறேன் என்று கூறி உள்ளே சென்ற வசிமுல்லாவின் மகள் சற்று நேரத்தில் வெளியே வந்து சற்று நெளிந்தபடி. தயங்கியபடி அப்பா வெளியே சென்றுவிட்டார் என்று பதில் கூறியிருக்கிறார்.
நிலைமையை புறிந்து கொண்ட பேரணாம்பட்டுக்காரர் விரக்தியுடன் ஊருக்கு கிளம்பி இருக்கிறார். இப்படியெல்லாம் பசி, பட்டினியால் கடனை கூட திருப்பித் தர முடியாத வாழ்க்கை வாழ்ந்து வந்த வசிமுல்லாவுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவரானதும் மாடி வீடு கட்டும் அளவுக்கு வசதி எப்படி வந்தது என பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாகக் கூறப்படுகிறது.
வசிமுல்லா மனிதர்களை ஏமாற்றி விடலாம். ஆனால் இறைவனின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று சமூக ஆர்வலர்கள் கூறி புலம்புகின்றனர். பணம் வந்த காரணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரித்து உண்மையை வெளி உலகுக்கு கொண்டு வர வேண்டும்.