BREAKING NEWS

பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..

பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..

திருநெல்வேலி மாவட்டம்; சேரன்மகாதேவி அருகே கோவிந்தப்பேரியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி யில் சுமார் 60 பேராசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

பல்கலைக்கழகம் அனைத்து மனோ கல்லூரி பேராசிரியர்களையும் ஜூன் 1 முதல் பணியிலிருந்து விடுவிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சேரன்மகாதேவி மனோ கல்லூரி பேராசிரியர்கள் 60 பேர் கல்லூரி முதல்வர் அறையில் உள்ளிருப்புப்போராட்டம் நடத்திவருகின்றனர்.

கல்லூரி ஆண்டுவிழாவுக்கு வருகைபுரிந்த மனோகல்லூரிகளின் இயக்குனர் முனைவர் வெளியப்பன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் பூவலிங்கம் ஆகியோரை கல்லூரி முதல்வர் அறையில் இருந்து வெளியேறாதவண்ணம் அடைத்துவைத்து பேராசிரியர்கள் போராடிவருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS