பேராசிரியர்கள் முன்னிலையில் அரசு கலைக் கல்லூரியில் வெளிநாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் வங்காளதேசத்தில் உள்ள தாக்காவின் குளோபல் லாதின்கேர்ஸ் சொசைட்டி மற்றும் Youth Empower School உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்வு நடைபெற்றது.

இதில் இரு கல்வி சார் நிறுவனங்களும் SDG நோக்கத்திற்காக இவ்வொப்பந்தம் நடைபெற்றது. இதில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கி.மாரியம்மாள், குளோபல் லா திங்கர்ஸ் சொசைட்டி இயக்குனர் மற்றும்

பெங்களூரின் கிருஸ்து ஜெயந்தி கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் எல் சந்தோஷ் குமார், ஆங்கிலத்துறைத்தலைவர் முனைவர் ச.வீரமணி, மற்றும் இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் ஜெயபிரகாஷ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
இந்நிகழ்வு கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
