BREAKING NEWS

பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்ந்து வருகிறது.

 

இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கனமழையால் வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளது.

 

ஏற்கெனவே ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் செல்வதால், மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வெள்ள காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

 

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தொழுதாலங்குடி கிராமத்தில் உள்ள கடகடப்பான் குளத்தில் பேரிடர் மேலாண்மை காலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் வெள்ள தடுப்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி குத்தாலம் வட்டாட்சியர் கோமதி, குத்தாலம் காவல் ஆய்வாளர் அமுதாராணி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்குழு அலுவலர் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் கோபி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

இதேபோல், தரங்கம்பாடி தாலுக்காவில் கடக்கம் கிராமம், மயிலாடுதுறை தாலுக்காவில் நீடூர் ஆகிய இடங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )