பேர்ணாம்பட்டு அருகே யானை மிதித்து பெண் படுகாயம் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கோபால் என்பவரின் மனைவி கோகிலா இவர் தனது விவசாய நிலத்தில் வழக்கம் போல் பணியை மேற்கொண்டு வந்திருந்தார்.
அப்பொழுது திடீரென வந்த ஒற்றை யானையை கோகிலாவை திடீரென ஒற்றையனை துரத்தி மிதித்தது இதில் கோகிலா படுகாயம் அடைந்துள்ளார். இதனை அடுத்து இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உறவினர்கள் யானையை சற்று தூரம் விரட்டி காயமடைந்த கோகிலாவை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை அடுத்து கோகிலாவை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை அடுத்து பேர்ணாம்பட்டு வனத்துறை வருவாய்த்துறை ஆகியோருக்கே தகவல் அளிக்கப்பட்டு தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் யானையை விரட்டும் பணியில் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பேரணாம்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி ஒற்றை அணையின் அட்டகாசம் செய்வதும் விவசாய நிலங்களை நாசம் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது இதனால் யானைகளின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பது அப்போது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
யானை பெண்ணை மிதித்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.