பையர்நத்தம் ஊர் ஏறி நிரம்பியது உபரி நீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் விவசாயிகள் கவலை.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் ஊர் ஏரி சுமார்100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி தண்ணீர் முலம் பையர் நத்தம், பள்ளிப்பட்டி . லூர்த்துபுரம் என சுமார் 3 கிலே மீட்டர் தூரம் வரை கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு, நிலத்தடி நீர் உயர்வுக்கு பெரும் பங்காற்றி வரு கின்றது.
சேர்வராயன் மலையிலிருந்து உற்பத்தியாகும் இந்த மீனாறு, போதக்காடு என்ற இடத்தில் குறுக்கே தடுப்பணை கட்டி கால்வாய் மூலமாக பையர்நத்தம் ஊர் ஏரிக்கு தண்ணீர் எடுத்து வரப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து மலமளவென அதிகரித்து ,சில தினங்களுக்கு முன்பு ஏறி அதன் முழு கொள்ளவை அடைந்தது. உபரி நீர் வாய்க்கால் மூலமாக மோளையனூர் பகுதியில் உள்ள குளம் குட்டை ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது.
தற்போது ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் பகுதிகளை துறை சார்ந்த அதிகாரிகள் முறையாக சுத்தம் செய்து, வடிகால்வாய் அமைக்காததால், பையர்நத்தம் பகுதியில் உள்ள கழிவுநீர்களும் குப்பை கழிவு, பிளாஸ்டிக்கவர்கள் கண்ணாடிபாட்டில் போன்றவை உபரி நீருடன் கலந்து விவசாய நிலங்களை பால் படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கேடு விழைவிக்கும் இந்த கழிவு பொருட்கள்உபரிநீர் வழியாக நெல், கரும்பு ,வாழை, தென்னை உள்ள வயல்வெளியில், பிளாஸ்டிக் கழிவுகள், மனித கழிவுகள், கழிவு நீருடன் கலந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.