பொதுமக்கள் சார்பாக வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திய நபரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரங்கப்பனூர் கிராமத்தில் மல்லாபுரம் பிரிவு சாலை அருகே ஊர் பொதுமக்கள் இணைந்து கிராமப்பகுதி பாதுகாப்பிற்காக வைத்திருந்த அதிநவீன சிசிடிவி கேமராவை அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி(25) த/பெ லட்சுமணன் என்பவர் கடந்த 09.06.2023-ந் தேதி இரவு கண்காணிப்பு கேமராவை தாக்கி சேதப்படுத்தி உள்ளார்,
இது தொடர்பாக இரங்கப்பனூர் கிராம நிர்வாக அலுவர் பாலசுப்பரமணியன் கேட்டதற்கு ஆபாசமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளி கணபதியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.