BREAKING NEWS

பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றால் எச்சிலை காறி துப்புவது, உட்கார்ந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவது என சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த இளம்பெண் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றால் எச்சிலை காறி துப்புவது, உட்கார்ந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவது என சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த இளம்பெண் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றால் எச்சிலை காறி துப்புவது, உட்கார்ந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவது என சாதி ரீதியாக மாமனார், மாமியார் உள்ளிட்ட கிராம மக்கள் கொடுமைப்படுத்துவதாக தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த இளம்பெண் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 

 

தஞ்சை மாவட்டம் புதுக்குடி. மேலத் திருவிழாப்பட்டி தெருவில் வசித்து வருபவர்கள் தேனேஷ்வரன், திலகவதி தம்பதியினர்.

 

 

பிற்படுத்த சமுகத்தை சேர்ந்த தேனேஷ்வரன் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த திலகவதியை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கனிஷ்கா, கர்ஷிகா, மகாதேவன் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். திருமணம் நடந்த நாளில் இருந்து இவர்கள் சீர்காழியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

 

 

இந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு தேனேஷ்வரன் குடும்பத்தினர் எங்களுடன் தஞ்சை வந்து விடுங்கள், உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என கூறினர். இதனை நம்பி தேனேஷ்வரன் தனது மனைவி, குழந்தைகளை அழைத்து கொண்டு 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி தஞ்சை வந்தார்.

 

 

வந்த நாளில் இருந்து தேனேஷ்வரன் குடும்பத்தினர்.திலகவதிசாதியை சொல்லி ஊரை விட்டு ஒதுக்கி வைத்து இருட்டு அறையில் குடி அமர்த்தி உள்ளனா.மேலும் ஊர் பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்தால் எச்சில் துப்புவது.

 

உட்கார்ந்த இடத்தில் தண்ணீர் ஊற்றி கழுவுவது, சாதி பெயரை சொல்லி அசிங்கமாக பேசுவது, குழந்தைகளை விட்டு விட்டு ஓடி போய விடு என சாதிய ரீதியாக தனக்கு நடக்கும் கொடுமைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்து நீதி கேட்டு திலகவதி தனது கணவன குழந்தைகளுடன கண்ணீர் விட்டு அழுதார்.

 

தீண்டாமை கொடுமை தஞ்சை மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களில் இன்றளவும் இருந்து வருகிறது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )