பொது தணிக்கை அறிக்கை படித்து காண்பித்து ஒப்புதல் பெறவும் இந்த கிராம சபை கூட்டம். பற்றாளராக வந்திருந்த அலுவலர் எந்த பதிவேடுகளும் இல்லாமல் வந்ததாக: கண் துடைப்பு கிராம சபையா என மக்கள் கேள்வி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பநல்லூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் சரமாரி கேள்வி நீர்நிலைகளை பாதுகாத்து சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வினியோகம் செய்வதற்கும்,
பொது தணிக்கை அறிக்கை படித்து காண்பித்து ஒப்புதல் பெறவும் இந்த கிராம சபை கூட்டம் காழியப்பநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பற்றாளராக வந்திருந்த அலுவலர் எந்த பதிவேடுகளும் இல்லாமல் வந்ததாகவும்,
தணிக்கை அறிக்கையை மக்கள் மன்றத்தில் படித்துக் காண்பிக்காமல் கிராம சபை வருகை பதிவேட்டில் கையெழுத்து மட்டும் வாங்குவது ஏன்? இந்த கூட்டத்திற்கான நோக்கம் என்ன கண் துடைப்பு கிராம சபையா என மக்கள் கேள்வி மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கைவிடுத்தனர்.