பொது மக்களிடமிருந்து திருடப்பட்ட 50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட ஐந்து லட்சம் மதிப்பிலான 50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் தெற்கலங்கம் காந்திஜி சாலை பகுதியில் கடந்த 2021 மற்றும் 22 ஆம் ஆண்டுகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட செல்போன்கள் தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரித்து வந்ததில்,..
சைபர் கிரைம் போலீசு உதவியுடன் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போன்கள் திருச்சி கோவை மதுரை சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பயன்படுத்தியவர்களிடம் இருந்து மீட்கப்பட்டு இன்று மேற்கு காவல் நிலையத்தில் தஞ்சை நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் காவல் ஆய்வாளர் சந்திரா உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் செல்போன் திருட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் மீதமுள்ள செல்போன்களும் விரைவில் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.