பொம்மிடி அருகே மக்களை கவரும் சுற்றுலாத்தலமாக மாறிவரும் யானை மடுவு.
தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மக்களின் மனம் கவர்ந்த சுற்றுலா தளமாக சேர்வராயன் மலையில் உள்ள யானை மடுவு மாறிவருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களின் மனம் கவர்ந் பகுதியாகவும் உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே, சேலம் தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ளது சேர்வராயன் மலை, கடல் மட்டத்தில் இருந்து 1 ,200 அடிக்கு மேல் உயரம் உள்ள இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டியான ஏற்காடு உள்ளது.
தருமபுரியில் இருந்து பொம்மிடி வழியாகவும் கோடைவாஸ்தவமான ஏற்காடு செல்லலாம் அந்த வழிப் பாதை யானைமடுவு வழியாக செல்கின்றது. இந்த பாதையில் 20க்கு மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது.
இந்த மலை பகுதியில் வேப்பாடி ஆறு உற்பத்தியாகிறது, இந்த ஆற்றில் 10 மேற்பட்ட அருவிகளும், சுமார் 6 கிலோமீட்டர் நீளத்திற்கு மலைகளின் இரு பகுதிகளுக்கு நடுவில் சாலை ஓர பகுதியில் பள்ளத்தாக்கில் வேப்பாடி ஆறு செல்கின்றது.
வானுயர்ந்த மதுர மரம், வேப்பமரம், மாமரம், வேங்கை மரம், அரசமரங்கள் 200 அடி உயரம் ஒங்கி வளந்துள்ளது. பசுமை போர்த்திய சோலைவனத்திற்குள் இந்த ஆறு செல்கிறது.
இந்த ஆற்றில் மக்களை கவரக்கூடிய இடங்களாக அணைக்கட்டுப்பகுதி ,,கோழி குஞ்சான் மடுவு, யானை மடுவு, புல்லத்தாச்சி கூண்டு என மக்களை கவரும் பல இடங்கள் உள்ளது.
இந்தக் காட்டில் சில இடங்களில் பாறைகள் நடுவில் அருவி போலவும், உள்ளது. மக்கள் குளிக்கும் இடங்களும் மிக பிரம்மாண்டமான பல டன் கொண்ட எடை கொண்ட பாறைகளும், குகைப் பகுதி போன்ற அமைப்புகளும் உள்ளது.
மிகவும் குளிர்ச்சியாகவும் , காடுகளில் பலவகையான தாவரங்களும், வானுயர்ந்த மரங்களும் இருப்பதால் காண்பதற்கு குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து செல்கின்றனர்.
தர்மபுரி, பெங்களூரு, கிருஷ்ணகிரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி . கடத்தூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் மக்கள் பொழுது போக்குவதற்காக குடும்பத்துடன் இருசக்கர வாகனம் சரக்கு வாகனம் மற்றும் சுற்றுலா வாகனங்களில் நூற்றுக்கணக்கான தினமும் வந்து செல்கின்றனர்.
தற்போது கடந்த ஓராண்டுகளாக பருவ மழை நன்றாக பெய்துள்ளதால், தொடர்ச்சியாக இந்த பகுதிகளில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து மிகவும் அழகாக செல்கிறது.
இவற்றை காண்பதற்காக தினமும் பொதுமக்கள் ஏராளமான இந்த பகுதியில் சுற்றுலாவாக வந்து செல்கின்றனர்.