BREAKING NEWS

பொறையர் TBML கல்லூரி மாணவர்கள் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே கேரளா மாநிலத்தில் நடைபெற உள்ள கால்பந்து போட்டிக்கு தேர்வு.

பொறையர் TBML கல்லூரி மாணவர்கள் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே கேரளா மாநிலத்தில் நடைபெற உள்ள கால்பந்து போட்டிக்கு தேர்வு.

செய்தியாளர் க.கார்முகிலன்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா TBML கல்லூரி மாணவர்கள் கேரளாவில் நடைபெற உள்ளது கால்பந்து போட்டிக்கு தேர்வு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.

 

இதில் 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து கால்பந்து போட்டி வீரர்கள் 20 அணிகளாக கலந்து கொண்டனர். இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் பொறையார், TBML கல்லூரி ஆண்கள் கால்பந்து அணியினர் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

 

இந்த வெற்றியின் மூலம் இந்த அணியிலிருந்து இரு மாணவர்கள் A. ரோஹித் குமார், I MBA., மற்றும் J. மார்க் ஆண்டனி, I B.Sc., இயற்பியல்துறை, அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேரளா மாநிலத்தில் நடைபெற உள்ள கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்கள்.

 

மேலும் வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்த பொறையார்,
TBML கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் Dr. ஜீன் ஜார்ஜ் மற்றும் துணை முதல்வர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

 

CATEGORIES
TAGS