பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

திருப்பூர் மாவட்டம்,
புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மைவாடி பிரிவில் போளர பட்டி செல்லும் வழியில் புதிதாக கட்டப்பட்ட டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது. இதனால் கோவை பொள்ளாச்சியில் இருந்து பழனி திண்டுக்கல் மதுரை சென்ற வாகனங்கள் மறுபுறம் செல்ல முடியாததால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடுமலை டிஎஸ்பி தேன்மொழிவேல் மடத்துக்குளம் தாசில்தார் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உடுமலை செல்வதற்காக மடத்துக்குளத்தில் இருந்து வந்த ஆம்புலன்ஸ்க்கு மறியலின் போது பொதுமக்கள் வழியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
