BREAKING NEWS

பொிய வியாழன் நிகழ்வின் ஆண்டவரின் இறுதி இரவு உணவு விழா.!

பொிய வியாழன் நிகழ்வின் ஆண்டவரின் இறுதி இரவு உணவு விழா.!

தூத்துக்குடியில்; கிறிஸ்தவர்களின் புனித வார நாளிலே பெரிய வியாழனாகிய , தாளமுத்து நகர் புனித மடு ஜெபமாலை மாத ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இத்திருப்பலியில் கிறிஸ்து ஏற்படுத்திய அன்பு கட்டளை, நற்கருணை மற்றும் குருத்துவம் நினைவு கூறப்பட்டது.

 

1. தொடக்கச் சடங்கு
2. இறைவாக்கு வழிபாடு
3. பாதம் கழுவும் சடங்கு
4. நற்கருணை வழிபாடு 5. நற்கருணை இடமாற்ற பவனி
என்ற ஐந்து பிரிவுகள் இன்றைய திருப்பலியில் இடம்பெற்றன.

 

 

பாதம் கழுவும் சடங்கில் இயேசுவின் சீடர்கள் 12 பேரை குறிக்கும் வகையில் 12 பேரின் கால் அடிகளை பங்குத்தந்தை கழுவி துடைத்து முத்தமிட்டார். பின்னர் அரிசி, வேட்டி, பன், பழம் கொடுத்தார். அருட்தந்தையர்கள் தனது மறையுரையின் போது குருத்துவம் பற்றியும் அதன் சிறப்பு செயல்கள் மற்றும் இறை மக்களோடு தொடர்பு பற்றி அருமையாக கூறினார்கள்.

 

 

நற்கருணை இடமாற்றப் பவனில் நற்கருணையானது வழக்கமான பீடத்திலிருந்து தனியே அலங்கரிக்கப்பட்ட பீடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டு நள்ளிரவு 12 மணி முடிய தொடர் ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்வுகளை எல்லாம் தாளமுத்துநகர் பங்குத்தந்தை அருட்திரு. நெல்சன் ராஜ் அடிகள் தலைமையேற்று நடத்தினார்.

 

உதவி பங்கு தந்தை அருட்திரு .வின்சென்ட் அடிகள் அருட் சகோதரர் மற்றும் அருள் சகோதரிகள் உடனிருந்து ஏற்பாடு செய்தனர். கோவில் நிர்வாகிகள், பக்த சபைகள், அன்பிய பொறுப்பாளர்கள் பங்குத்தந்தையோடு இணைந்து விழா ஏற்பாடுகளை செய்தனர்.

 

புனித வெள்ளி காலை முதல் நற்குணனை பீடம் முன் மௌன ஆராதனை நடைபெறும் பின்னர் மாலை 3:00 மணிக்கு புனித வெள்ளி திருச்சடங்குகள் ஆரம்பமாகும். ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS