BREAKING NEWS

போடிநாயக்கனூரில் ஏலக்காய் ஏலத்தை புறக்கணித்த வியாபாரிகள்

போடிநாயக்கனூரில் ஏலக்காய் ஏலத்தை புறக்கணித்த வியாபாரிகள்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஏலக்காய் கடைகளில் சோதனை செய்து ஏலக்காய்களில் கலர் சாயம் பூசப்படுவதாக நடவடிக்கை மேற்க்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று ஏலக்காய் கடை நடத்தி வரும் பல ஏலக்காய் வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதால் ஆத்திரமடைந்த ஏலக்காய் வியாபாரிகள் போடியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நறுமணப் பொருட்கள் வாரியத்தில் நடைபெற இருந்த ஏலக்காய் ஏலத்தை புறக்கணிப்பு செய்தனர்.

மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நறுமணப் பொருட்கள் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு வாங்கும் ஏலக்காய்களை தான் நாங்கள் வாங்கி விற்பனை செய்வதாகவும், அதில் தாங்கள் கலர் சாயம் கலப்பத்தில்லை என்றும், இதற்கு மத்திய அரசின் நறுமணப் பொருட்கள் வாரியம் தான் முழு பொறுப்பு எனவும் குற்றஞ்சாட்டினர்.

CATEGORIES
TAGS