போடிநாயக்கனூரில் பொது மக்கள் குறை தீர்க்கும் வருவாய் தீர்வாய முகாம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வருவாய் கூட்டத்திற்கு உட்பட்ட நகர் மற்றும் ஊராட்சி பகுதியில் உள்ள பொது மக்கள் மக்கள் குறை தீர்வு முகாம் 17.05.23 புதன்கிழமை முதல் தொடங்கி 24.05.23 புதன்கிழமை வரைநடைபெறுகிறது.
தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா தலைமையில் நடைபெறும் இந்த வருவாய் தீர்வாய முகாமில் போடி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள்
வரிசையில் நின்று தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.
பல்வேறு பொதுமக்களுக்கு ஆதரவற்ற விதவைகள் உதவி தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வழங்கப்பட்ட சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
சில மலையை சேர்ந்த ராமர் என்ற ஊனமுற்ற பொறியாளர் சிலமலை ஊராட்சியில் தனக்கும் தனது மனைவிக்கும் 100 நாள் வேலை திட்ட பணியாளர் அட்டைக்கு விண்ணப்பித்தும் நீண்ட நாட்களாக வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாககூறி கோரிக்கை மனு வழங்கினார்.
கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சஜீவனா உடனடியாக அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.